தீபாவளிக்கு ஃபர்ஸ்ட் லுக், டிசம்பரில் திரையில்!

தீபாவளிக்கு ஃபர்ஸ்ட் லுக், டிசம்பரில் திரையில்!

செய்திகள் 29-Sep-2015 12:33 PM IST VRC கருத்துக்கள்

‘ஜிகர்தண்டா’வை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படம் ‘இறைவி’. சி.வி.குமாரின் ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனமும், கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி முதலானோர் நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. இதனை தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் துவங்கியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கும் இப்படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’கை தீபாவளியன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து ‘இறைவி’ படத்தை டிசம்பர் மாதம் வெளியிடவும் படக்குழுவினர் தீர்மானித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கருப்பன் - மோஷன் போஸ்டர்


;