‘மாயா’வுக்கு மற்றுமொரு கௌரவம்!

‘மாயா’வுக்கு மற்றுமொரு கௌரவம்!

செய்திகள் 29-Sep-2015 12:02 PM IST VRC கருத்துக்கள்

‘பொட்டென்ஷியல்’ நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘மாயா’. நயன்தாரா, ஆரி, அம்ஜத், ரேஷ்மி மேனன், ‘ரோபா’ சங்கர் முதலானோர் நடித்த இப்படத்தை அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கிறார். படம் பெரும் வெற்றி பெற்றிருப்பதோடு, விமர்சன ரீதியாகவும் இப்படத்திற்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்துள்ளன. ஏற்கெனவே ஹாலிவுட் பட இயக்குனரான எரிக் இங்கிலாந்த் ‘மாயா’ படத்தை பாராட்டியுள்ள நிலையில், சென்ட் லூயிஸ், மெசூரி நாட்டில் செயல்படும் ‘HORROR MOVIES UNCUT’ என்கிற இணைய தளத்தின் ஆசிரியர் Travis Brown, ‘மாயா’ படம் சம்பந்தமான தகவல்களை LinkedIn சமூகவலைதளத்தில் வெளியாகியிருப்பதை பார்த்து தங்களது இணைய தளத்திலும் ‘மாயா’ படம் சம்பந்தமான தகவல்களை வெளியிட்டிருக்கிறார். அத்துடன் விரைவில் ‘மாயா’வின் விமர்சனத்தை வெளியிடவும் அவர் முடிவு செய்துள்ளார்! உலக அளவில் வெளியாகும் சிறந்த ஹாரர் படங்கள் சம்பந்தமான தகவல்களை மட்டுமே வெளியிடும் இணைய தளம் ‘HORROR MOVIES UNCUT’ என்பது குறிப்பிடத்தக்கது.

http://horrormoviesuncut.com/2015/09/28/stills-from-potential-studios-maya/

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அறம் - டிரைலர்


;