‘குற்றம் கடிதல்’ படக்குழுவினரின் பரபரப்பு அறிக்கை!

‘குற்றம் கடிதல்’ படக்குழுவினரின் பரபரப்பு அறிக்கை!

செய்திகள் 28-Sep-2015 3:31 PM IST VRC கருத்துக்கள்

கடந்த வாரம் வெளியான படம் ‘குற்றம் கடிதல்’. சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது உட்பட பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை அள்ளிய இப்படம், ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் மிகச் சிறந்த படம் என்று பாராட்டப்படுகிற்து. இந்நிலையில் இந்த படம் சம்பந்தமாக இதன் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘‘குற்றம் கடிதல்’ எனக்கு மட்டுமல்ல, இந்தப் படத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மிகப் பெரிய கெளரவம் தந்த படமாகும். இந்த படத்திற்கு உலகமெங்கிலிருந்தும் புகழாரங்கள், பாராட்டுக்கள் வந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஓட்டத்தை முறியடிக்கும் விதமாக பைரசி மூலம் படம் பார்க்கும் படலம் ஆரம்பித்திருக்கிறது. இதை தடுக்க எங்களது தயாரிப்பு குழுவினரின் சார்பில் ஒரு படை அமைத்து அதை தடுக்க இருக்கிறோம். இதையும் மீறி இத்தகைய செயலில் ஈடுப்பட்டால் மிக கடுமையான முறையில் தண்டிக்கப்படுவார்கள் என்பதை இந்த அறிக்கை மூலம் எச்சரித்து கொள்கிறேன்’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தரமணி - யாரோ உச்சிக்கிளை பாடல் வீடியோ


;