தமிழில் ஒரு ‘இங்கிலீஷ் படம்!’

தமிழில் ஒரு ‘இங்கிலீஷ் படம்!’

செய்திகள் 28-Sep-2015 2:47 PM IST VRC கருத்துக்கள்

சில முன்னணி விளம்பர படங்களை தயாரித்த ‘R.J.media creations’ நிறுவனம் சார்பில் ஆர்.ஜெ.எம்.வாசுகி தயாரிக்கும் முதல் திரைப்படத்திற்கு ‘இங்கிலீஷ் படம்’ என்று பெயர் வைத்துள்ளனர். தமிழில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் குமரேஷ் குமார் இயக்குகிறார். இவர் சில விளம்பர படங்களை இயக்கி அனுபவம் பெற்றவர். இப்படத்தில் ‘குளிர் 100’ படத்தில் நடித்த சஞ்சீவ் ஹீரோவாக நடிக்க புதுமுகம் ஸ்ரீஜா தாஸ் மற்றும் ராம்கி, மீனாட்சி, மதுமிதா என பலர் நடிக்கின்றனர்.

காமெடி த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு எம்.சி.ரிகோ இசை அமைக்கிறார். சாய் சதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார். எம்.மகேந்திரன் படத்தொகுப்பை கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆங்கில படம் - டிரைலர்


;