கேரளாவில் எவ்வளவு தியேட்டரில் ரிலீஸாகிறது புலி?

கேரளாவில் எவ்வளவு தியேட்டரில் ரிலீஸாகிறது புலி?

செய்திகள் 28-Sep-2015 12:32 PM IST Chandru கருத்துக்கள்

கேரளாவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தைக் கொண்டிருக்கும் தமிழ் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். அவரின் ஒவ்வொரு தமிழ்ப் படமும் அங்கு பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்படும். குறைந்தது 100 திரையரங்குகளாவது விஜய் படங்களுக்காக கேரளாவில் ஒதுக்கப்படும். இந்த எண்ணிக்கை அங்கு வெளியாகும் நேரடி மலையாளப் படங்களுக்கு இணையாக இருப்பது இன்னொரு சிறப்பு.

வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் விஜய்யின் ‘புலி’ படத்திற்காக கேரளாவில் கிட்டத்தட்ட 130 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டிருக்கிறதாம். கேரளாவின் பிரபல விநியோகஸ்தரான ஷிபு தமீம்ஸ், புலி படத்தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. கத்தியைவிட ‘புலி’க்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தியேட்டர்களின் எண்ணிக்கை சற்று குறைவுதான். இதற்கு காரணம் சமீபத்தில் வெளியான ‘எந்நு நின்டெ மொய்தீன்’ மலையாள படம் சூப்பர்ஹிட்டாகி ஓடிக் கொண்டிருப்பதுதானாம். படத்தின் ரிசல்ட்டைப் பொறுத்து தியேட்டர் எண்ணிக்கையில் மாற்றம் வரலாம் என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;