மலையாள ‘ரீ-மேக்’குக்கு இசை அமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!

மலையாள ‘ரீ-மேக்’குக்கு இசை அமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!

செய்திகள் 28-Sep-2015 10:55 AM IST VRC கருத்துக்கள்

பிருத்திவி ராஜ், பார்வதி மேனன் நடித்து, கடந்த வாரம் வெளியான மலையாள படம் ‘எந்நு நின்டெ மொய்தீன்’. கேரளாவில் மொய்தீன் என்ற ஒரு முஸ்லீம் இளைஞனுக்கும், காஞ்சனமாலா என்ற ஒரு ஹிந்து பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட காதல், அதை தொடர்ந்து இவர்களது காதலுக்கு ஏற்பட்ட இடையூறுகள், போராட்டங்கள் என நிஜத்தில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது! இந்த நிஜ கதையின் நாயகியான காஞ்சனமாலா இன்னும் கேரளாவில் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அறிமுக இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இயக்கியிருக்கும் இப்படம் கேரளாவில் மாபெரும் வெற்றிப் பெற்றுள்ளதை தொடர்ந்து இந்த கதையை தமிழில் ரீ-மேக் செய்து தயாரிக்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறாது. இப்படத்தின் கதை குறித்தும், அதன் வெற்றிக் குறித்தும் கேள்விப்பட்ட இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த கதை தமிழில் எடுக்கப்படுமானால் தான் இசை அமைக்க தயாராக இருப்பதாக கூறி இருக்கிறாராம்!. இதனை சமீபத்தில் கேரளாவில் நடந்த ஒரு பத்திரைகையாளர் சந்திப்பில் கூறி இருக்கிறார் படத்தின் இயக்குனர் ஆர்.ஏஸ்.விமல்! மலையாளத்தில் இயக்கிய ஆர்.எஸ்.விமலே தமிழ் ரீ-மேக்கையும் இயக்கவிருக்கிறார். தமிழுக்கான திரைக்கதையை ஜெயமோகன் எழுதுகிறார். நடிகர், நடிகைகள் யார் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;