‘நானும் விர்ஜின் பாய் தான்!’ – ‘வில்அம்பு’ விழாவில் பாரதிராஜா!

‘நானும் விர்ஜின் பாய் தான்!’ – ‘வில்அம்பு’ விழாவில் பாரதிராஜா!

செய்திகள் 28-Sep-2015 10:38 AM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் சுசீந்திரனின் ‘நல்லு சாமி பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் அவரது தம்பி தாய் சரவணனும், ஏ.நந்தகுமாரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘வில் அம்பு’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. ஸ்ரீ மற்றும் ஹரிஷ் கல்யான் கதையின் நாயகர்களாகவும், ஸ்ருஷ்டி டாங்கே, சம்ஸ்கிரிதி ஷெனாய் ஆகியோர் கதையின் நாயகிகளாகவும் நடித்திருக்கும் இப்படத்தை இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளர் ரமேஷ் சுப்ரமணியம் இயக்கியுள்ளார்.

விழாவில் சுசீந்திரன் பேசும்போது, ‘‘இந்த மேடை எனக்கு முதல் மேடை போல் உள்ளது/ ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா மேடையில் நிற்கும்போது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி ஏற்பட்டதோ அதே அளவு மகிழ்ச்சி இப்போது உள்ளது. இந்த ‘வில் அம்பு’ படம் எனக்கும், ரமேஷ் சுப்ரமணியத்துக்கும் இடையிலான பதிநான்கு வருட நட்பின் சாட்சி’’ என்றார்.

நடிகர் சூரி பேசும்போது, ‘‘ நான் சுசீந்திரன் அண்ணாவின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவன். நான் மட்டும் அல்ல விஷ்ணு உள்ளிட்ட பலர் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலமாக வந்தவர்கள் தான். இப்போது அண்ணன் தயாரித்துள்ள ‘வில் அம்பு’ படத்தில் இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ் குமார், அனிருத், டி.இமான் ஆகியோர் பாடியுள்ளனர். வெற்றி இசையமைப்பாளர்களான இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடி இருப்பதே படத்துக்கும், பாடலுக்கும் கிடைத்த மிகபெரிய வெற்றியாகும்’’ என்றார்.

படத்தின் இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் பேசும்போது, ‘‘இந்த படத்தின் இசையமைப்பாளர் நவீனின் பாடல்கள் படத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது. இந்த படம் வெற்றி பெற அவர் முக்கிய காரணமாக இருப்பார் என்பதை கூறிவிட்டு, இயக்குநர் சுசீந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறி’’ தன் பேச்சை எளிமையாக முடித்துக் கொண்டார்.

ஆடியோவை வெளியிட்ட இயக்குநர் பாரதிராஜா பேசும்போது, ‘‘ சுசீந்திரன் தான் என்னை முதலில் நடிக்க வைத்தார். அவர் மிக சிறந்த இயக்குநர் என்பதில் மாற்று கருத்தே இல்லை. விழா மேடையில் ஜி.வி.பிரகாஷுடன் நானும் அமர்ந்திருப்பது, நானும் அவரை போல் வெர்ஜின் பாய் தான் என்பதை நிரூபிக்க முடிந்தது. (அரங்கத்தில் பலத்த கைத்தட்டலுடன் ஒரே சிரிப்பு…). இப்போது பாடல் காட்சிகளை லிப் அசைக்காமல் எடுக்கிறார்கள். அது எனக்கு தவறாகப்படுகிறது. லிப் அசைவோடு எடுக்கும்போது தான் ஒரு நடிகனின் நடிப்பு வெளிவரும்’’ என்றார்.
இவ்விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த கலைப்புலி எஸ்.தாணு, டி.சிவா, கதிரேசன், தேனப்பன் மற்றும் தயாரிப்பாளர்கள் கே.ஈ.ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரபு, ஜி.வி.பிரகாஷ் குமார், டி.இமான், வில் அம்பு படத்தில் நடித்த அத்தனை கலைஞர்களும் கலந்துகொண்டனர். விழாவை நடிகர் ஹரிஷ் உத்தமன் தொகுத்து வழங்கினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விசிறி - டிரைலர்


;