‘மாயா’ வெற்றி விழா ஹைலைட்ஸ்!

‘மாயா’ வெற்றி விழா ஹைலைட்ஸ்!

கட்டுரை 26-Sep-2015 4:16 PM IST VRC கருத்துக்கள்

கடந்த 17-ஆம் தேதி வெளியாகி, மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ‘மாயா’. தமிழில் ‘மாயா’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘மயூரி’ என்ற பெயரிலும் வெளியாகிய இப்படத்தின் வெற்றியை இன்று பத்திரைகையாளர்களுடன் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, படத்தின் இயக்குநர் அஸ்வின் சரவணன், படத்தில் நடித்த ஆரி , அம்ஜத் கான், ஷரத், ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன், படத்தொகுப்பாளர் டி.எஸ்.சுரேஷ், இசை அமைப்பாளர் ரான் யோஹான், ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

முதலாவதாக பேசிய நடிகர் ஆரி, ‘‘மாயா படத்தின் வெற்றி எனக்கு மிக பெரிய மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்த முழுமையான வெற்றியை சுவைக்க தான் நான் வெகு நாட்களாக காத்துக்கொண்டு இருந்தேன். நான் ‘மாயா’ படத்தில் நடிக்கிறேன் என்று கேள்விப்பட்டதும் எல்லோரும் வந்து என்னிடம் ஏன் கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் கதையில் நடிக்கிறீர்கள் என்று என்னிடம் கேட்டனர். அவர்கள் எழுப்பிய கேள்விக்கு மாயாவின் வெற்றி பதில் சொல்லி உள்ளது. படம் தெலுங்கிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது எனக்கு மகிழ்ச்சி’’ என்றார்.

நடிகர் அம்ஜத் பேசும்போது, ‘‘படத்தின் இயக்குநர் அஸ்வின் சரவணன் என்னுடைய நெருங்கிய நண்பர். இப்படத்தின் கதையை கேட்டவுடன் நான் இந்த படத்தில் நிச்சயம் எதாவது ஒரு சின்ன வேடத்திலாவது நடித்துவிட வேண்டும் என்று ஆவலாக இருந்தேன். அஸ்வின் சரவணன் என் நண்பனாக இருந்தபோதும் என்னை ஆடிஷன் செய்து தான் இந்த படத்திற்கு எடுத்து கொண்டார். அந்த அளவுக்கு அவர் படம் நன்றாக வரவேண்டும் என்று சுயநலத்தோடு உழைத்தார்’’ என்றார்.

படத்தை தெலுங்கில் ரிலீஸ் செய்த கல்யான் பேசும்போது, ‘‘நான் மாயா படத்தை முதல் முறை பார்த்தவுடன் இந்த படத்தை நான் தான் வெளியிட வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். மாயா திரைப்படம் வெளியாகி நான்கு நாட்களில் தெலுங்கில் ஐந்தரை கோடியை வசூலித்துள்ளது. இது மிக பெரிய சாதனையாகும்’’ என்றார்.

படத்தின் இயக்குநர் அஸ்வின் சரவணன் நன்றி கூறும்போது, ‘‘மாயா படத்தின் வெற்றி எனக்கு மிகவும் முக்கியமானது. இப்பாம் எனக்கு நிறைய நம்பிக்கையை கொடுத்துள்ளது. படத்தின் தயாரிப்பாளர் என்னை கண்மூடித்தனமாக நம்பி இந்த படத்தை தயாரித்துள்ளார். மாயா படத்தை எடுக்கும்போது படத்தின் முடிவு இப்படி தான் இருக்க வேண்டும் என்று கூறி தான் முடித்தேன். இந்த படத்தை இயக்கும் வாய்ப்பு தந்த எஸ்.ஆர்.பிரபு சார், தங்க பிரபாகரன் சார் ஆகியொருக்கு நன்றி சொல்லிக்கிறேன். அத்துடன் இந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணை புரிந்த அத்தனை பத்திரிகையாளர்களுக்கும் நன்றி’’ என்றார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு பேசும்போது, ‘‘எங்கள் பொட்டென்ஷியல் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக வெளிவந்துள்ள ‘மாயா’வின் வெற்றிக்கு உறுதுனை புரிந்த அனைவருக்கும் நன்றி!’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - டீசர்


;