அனுஷ்காவுடன் மோதும் அனுஷ்கா!

அனுஷ்காவுடன் மோதும் அனுஷ்கா!

செய்திகள் 26-Sep-2015 3:36 PM IST VRC கருத்துக்கள்

அனுஷ்கா, அல்லு அர்ஜுன், ராணா முதலானோர் நடிப்பில் உருவாகியிருக்கும் பிரம்மாண்ட படம் ‘ருத்ரம்மா தேவி’. குண்சேகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். ராஜமௌலியின் ‘பாகுபலி’யை போலவே இப்படமும் சரித்திர கதையாக உருவாகியிருப்பதோடு இப்படம் மீதும் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தெலுங்கில் உருவான இப்படம் தமிழ் மொழியிலும் வெளியாகவிருக்கிறது. தமிழகத்தில் இப்படத்தை வெளியிடும் உரிமையை ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் கைபற்றியுள்ளது. ‘பாகுபலி’யில் ஒரு முக்கிய கேரக்டரை ஏற்று நடித்ததைப் போலவே ‘ருத்ரம்மா தேவி’யிலும் முக்கிய வேடமேற்று நடித்துள்ளார் அனுஷ்கா! ‘ருத்ரம்மா தேவி’ படத்தை அடுத்த மாதம் 9-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ள் நிலையில் அனுஷ்கா கதாநாயகியாக நடித்துள்ள மற்றொரு படமான ‘இஞ்சி இடுப்பழகி’ படமும் அக்டோபர் 9 அன்று ரிலீஸ் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். பிரபல ‘பிவிபி சினிமா’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க, அனுஷ்கா மாறுபட ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். பிரகாஷ் இயக்கியுள்ள இப்படத்திற்கு ‘பாகுபலி’ படத்திற்கு இசை அமைத்த மரகதமணி இசை அமைத்துள்ளார். அனுஷ்கா நடித்த இந்த இரண்டு படங்கள் ஒரே தினம் வெளியாகவிருப்பது கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;