‘ருத்ரமாதேவி’க்கும் ‘பாகுபலி’க்கு கிடைத்த அதே ரிசல்ட்!

‘ருத்ரமாதேவி’க்கும் ‘பாகுபலி’க்கு கிடைத்த அதே ரிசல்ட்!

செய்திகள் 26-Sep-2015 11:39 AM IST VRC கருத்துக்கள்

75 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பாகுபலி’யைத் தொடர்ந்து, வரும் அக்டோபர் 9ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது ‘ருத்ரமாதேவி’. இந்தியாவின் முதல் 3டி வரலாற்றுப் படம் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் இப்படத்தில் அனுஷ்கா நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் அல்லு அர்ஜுன், ராணா டகுபதி, சுமன், பிரகாஷ்ராஜ், பிரம்மானந்தம், நித்யா மேனன் உள்பட ஏகப்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். குணசேகர் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

மொத்தம் 158 நிமிடங்கள் ஓடும் இப்படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. ரத்தம் தெறிக்கும் போர்க் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என்பதாலேயே ‘பாகுபலி’க்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. தற்போது இதே காரணத்திற்காகத்தான் ‘ருத்ரமாதேவி’க்கும் அதே ரிசல்ட் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழகமெங்கும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நான் ஆணையிட்டால் - டிரைலர்


;