இது விளையாட்டு ‘புலி’

இது விளையாட்டு ‘புலி’

செய்திகள் 26-Sep-2015 11:26 AM IST VRC கருத்துக்கள்

பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களின் வீடியோ கேம் வெளியாவது இப்போது சர்வசாதாரணமாகி விட்டது. இதற்கு உதாரணமாக நிறைய ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் படங்களைச் சொல்லலாம். ஏற்கெனவே விஜய் நடித்த ‘துப்பாக்கி’, ‘கத்தி’ ஆகிய படங்களின் வீடியோ கேம் வெளியாகியுள்ள நிலையில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமான படமாக உருவாகியுள்ள ‘புலி’ படத்தின் வீடியோ கேமும் உருவாக்கப்பட்டு, வெளியாகியுள்ளது. இந்த புலி கேம் வீடியோவை வடிவமைத்திருப்பவர்கள் ஏற்கெனவே ஹிந்தி ‘கப்பார்’ மற்றும் விஜய் நடித்த ‘துப்பாக்கி’, ‘கத்தி’ படங்களின் கேம் வீடியோவை உருவாக்கிய SKYTOU STUDIOS நிறுவனத்தினர் தான். ‘புலி’ படத்தில் பரபரப்பான காட்சிகள் நிறயவே உண்டு. அதேபோலபுலி கேமிலும் பரபரப்பான விளையாட்டை விளையாடலாம். செயற்கையான கார், பைக் என வாகனங்களை ஓட்டுவதிலிருந்து இது முற்றிலும் புதுமையான அனுபவமாக இருக்கும் என்கிறார்கள். விஜய்யின் ‘புலி’ அக்டோபர் 1-ஆம் தேதி உலகம் முழுக்க 3000 தியேட்டர்களுக்கும் மேல் ரிலீசாகவிருக்கிற நிலையில் ‘புலி’ கேம் வீடியோ வெளியாகியிருப்பது அவரது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;