கவர்ச்சிக்கு குட்பை! சோனா அதிரடி!

கவர்ச்சிக்கு குட்பை! சோனா அதிரடி!

செய்திகள் 26-Sep-2015 10:42 AM IST VRC கருத்துக்கள்

பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்த சோனா, இனி கவர்ச்சியாக நடிக்க மாட்டாராம்! இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அப்படி இப்படி என்று கவர்ச்சியை காட்டி 75 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். எல்லா மொழிகளிலும் எல்லா பிரபலமான நடிகர்களுடனும் நடித்து விட்டேன். கவர்ச்சியாக நடிப்பது எனக்கே போரடித்துவிட்டது. இனி அப்படி நடிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். கேரக்டர் ரோல்களில் மட்டுமே நடிப்பது என்று முடிவெடுத்திருக்கிறேன். கதை எழுதுவதற்கு முன்பு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கிற நீங்கள், குணசித்திர கேரக்டர் என்று வரும்போது சோனா என்று எழுதி என்னை அழையுங்கள். நான் நல்ல கேரக்டர்களில் நடிக்க காத்திருக்கிறேன்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;