ஜி.வி.க்கு ஜோடியாகும் க்ரித்தி!

ஜி.வி.க்கு ஜோடியாகும் க்ரித்தி!

செய்திகள் 26-Sep-2015 10:22 AM IST VRC கருத்துக்கள்

‘டார்லிங்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் ‘புரூஸ் லீ’. அறிமுக இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தில் ஜி.வி.க்கு ஜோடியாகிறார் பிரபல கன்னட நடிகை க்ரித்தி கர்பந்தா. இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் இரண்டாவது வாரத்தில் துவங்கவிருக்கிறது. இப்படத்தில் ஜி.வி.யுடன் ஜோடி சேரும் க்ரித்தி கர்பந்தா இப்போது ராம்சரணுடன் ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பெயரும் ‘புரூஸ் லீ’ என்பது குறிப்பிடத்தக்கது. ஜி.வி.பிரகாஷ், க்ரித்தி இணைந்து நடிக்கும் ‘புரூஸ் லீ’யில் க்ரித்தி, சரோஜா தேவி என்ற கேரக்டரில் நடிக்கிறார். ஜி.வி.யின் கேரக்டர் பெயர் ‘புரூஸ் லீ’ என்பதால் தான் படத்திற்கு அந்த டைட்டில் வைத்துள்ளார்களாம். மற்றபடி எந்த மார்ஷியல் ஆர்ட் சம்பந்தப்பட்ட கதையும் இல்லையாம் இப்படம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டைட்டில் மோஷன் போஸ்டர்


;