சென்சார் ஆனது உப்புகருவாடு!

சென்சார் ஆனது உப்புகருவாடு!

செய்திகள் 25-Sep-2015 3:11 PM IST VRC கருத்துக்கள்

‘பயணம்’ படத்தை தொடர்ந்து ராதாமோகன் இயக்கியுள்ள படம் படம் ‘உப்பு கருவாடு’. ராதா மோகனின் ‘நைட் ஷோ பிக்சர்ஸ்’ நிறுவனமும் ராம்ஜி நரசிம்மனின் ஃபர்ஸ்ட் காப்பி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் கருணாகரன், நந்திதா ஜோடியாக நடிக்க, எம். எஸ். பாஸ்கர், மயில்சாமி, குமாரவேல், சாம்ஸ், நாராயணன், புது முகம் ரக்ஷிதா, சரவணன், 'டவுட்' செந்தில் ஆகியோரும் நடித்துள்ளனர். அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வரும் இப்படம் சென்சார் குழுவினரின் பார்வைக்கு சென்றது. காதல், நகைச்சுவை கலந்த ஜனரஞ்சக படமாக அமைந்துள்ள இப்படத்திற்கு சென்சார் குழுவினர் அனைவரும் பார்க்க கூடிய படம் என்ற ‘யு’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். மகேஷ் முத்துசாமி ஒளிபதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு புகழ்பெற்ற கிட்டார் இசை கலைஞர் ஸ்டீவ் வாட்ஸ் இசை அமைத்துள்ளார். இவர் இசை அமைக்கும் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உள்குத்து - டிரைலர்


;