‘ஈட்டி’க்காக ரத்தம் சிந்திய அதர்வா

‘ஈட்டி’க்காக ரத்தம் சிந்திய அதர்வா

செய்திகள் 25-Sep-2015 1:27 PM IST VRC கருத்துக்கள்

‘நாடோடிகள்’, ‘சிந்து சமவெளி’, ‘பட்டத்து யானை’ உட்பட பல படங்களை தயாரித்த மைக்கேல் ராயப்பனின் ‘குளோபல் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் சார்பில் அவரது மகன் செராபின் ராய சேவியர் தயாரித்துள்ள படம் ‘ஈட்டி’. இயக்குனர் வெற்றிமாறனின் அசிஸ்டென்ட் ரவிஅரசு இயக்கியுள்ள இப்படத்தில் அதர்வா, ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடிக்க, இவர்களுடன் ‘ஆடுகளம் நரேன், ஜெயபிரகாஷ், செல்வா, சோனியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஸ்போர்ட்ஸை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று காலை சென்னையிலுள்ள கமலா தியேட்டரில் நடைபெற்றது. படத்தின் பாடல்களை இயக்குனர் ரவிஅரசுவின் குருநாதர் வெற்றிமாறன் வெளியிட, விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர். அதன் பிறகு ‘ஈட்டி’ ஹீரோ அதர்வா பேசும்போது,

‘‘இந்த கதையை முதலில் ‘கலைப்புலி’ எஸ்.தாணு சார் தயாரிக்க திட்டமிட்டிருந்தார். அவர் தான் முதலில் எனக்கு இந்த ஸ்கிரிப்ட்டை சொன்னார். அதற்கு பிறகு இந்த கதையை கேட்ட வெற்றிமாறன் சாரும் அதை தயாரிக்க முன் வந்தார். அதன் பிறகு இந்த கதையை கேட்ட மைக்கேல் ராயப்பன் சாரும் அதை தயாரிக்க விருப்பம் தெரிவிக்க, வெற்றிமாறன் சார் அவருக்கு விட்டுக்கொடுத்தார். இப்போது மைகேல் ராயப்பன் சார் தயாரிப்பில் ‘ஈட்டி’ பிரம்மண்ட படமாக வந்துள்ளது. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு தந்த அனைவருக்கும் நன்றி!

மாறுபட்ட கேரக்டர்களில் நடிப்பது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அது மாதிரி இப்படத்திலும் எனக்கு மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நாம் விளையாட்டாக இரத்தம் சிந்தி உழைக்க வேண்டும் என்று சொல்வோம். ஆனால் உண்மையிலேயே இப்படத்தில் நான் ரத்தம் சிந்தி நடித்துள்ளேன். இந்த படத்திற்காக நிறைய கடுமையான பயிற்சிகளை எடுத்திருக்கிறேன். அப்படி பயிற்சி எடுக்கும்போது நிறைய ரத்தம் சிந்தியிருக்கிறேஎன். இப்படம் உங்களுக்கு எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்’’ என்றார்.

இந்த விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் ‘கலைப்புலி’ எஸ்.தாணு, டி.சிவா, கதிரேசன், பி.எல்.தேனப்பன் மற்றும் கே.ராஜன், கேயார், வெற்றிமாறன், தயரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், பாடலாசிரியர் நா.முத்துக்குமார், படத்தின் நாயகி ஸ்ரீதிவ்யா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டைட்டில் மோஷன் போஸ்டர்


;