அமெரிக்காவில் புதிய சாதனை படைக்கும் ‘புலி’ விஜய்!

அமெரிக்காவில் புதிய சாதனை படைக்கும் ‘புலி’ விஜய்!

செய்திகள் 25-Sep-2015 10:48 AM IST Chandru கருத்துக்கள்

அக்டோபர் 1ஆம் தேதி உலகமெங்கும் வெளியாவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது விஜய்யின் ‘புலி’. ஃபேன்டஸி படமான ‘புலி’யை சிம்புதேவன் இயக்கியிருக்கிறார். சமீபத்தில் சென்சாரில் ‘யு’ வாங்கிய இத்திரைப்படம் மொத்தம் 154 நிமிடங்கள் ஓடக்கூடியதாக உருவாகியிருக்கிறதாம். விஜய்யின் கேரியரிலேயே இப்படம் அதிகஅளவில் திரையிடப்படவிருக்கிறதாம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகும் இப்படம் மொத்தம் 3000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறுகிறார்கள். குறிப்பாக இப்படம் அமெரிக்காவில் மட்டுமே கிட்டத்தட்ட 140 திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் 106 திரையரங்குகளிலும் தெலுங்கில் 34 திரையரங்குகளிலும் ‘புலி’ படம் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிறதாம்.

அமெரிக்காவில் இதுவரை வெளியான விஜய் படங்களைப் பொறுத்தவரை ‘புலி’ படம்தான் அதிகபட்ச எண்ணிக்கையில் வெளியாகவிருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குலேபகாவலி - சேராமல் போனால் பால் வீடியோ


;