விஜய்சேதுபதியின் காதலும் கடந்து போகும்!

விஜய்சேதுபதியின் காதலும் கடந்து போகும்!

செய்திகள் 24-Sep-2015 2:38 PM IST VRC கருத்துக்கள்

‘அட்டகத்தி’, ‘பிட்சா’, ‘சூதுகவ்வும்’, ‘வில்லா’ (பிட்சா 2), ‘மூண்டாசுப்பட்டி’, ‘இன்று நேற்று நாளை’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை தனது ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் தயாரித்த சி.வி.குமார், அடுத்து கே.ஈ. ஞானவேல் ராஜாவின் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனத்துடன் இணைந்து ஒரு பிரம்மாண்ட படத்தை தயாரிக்கிறது. ‘காதலும் கடந்து போகும்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ‘சூதுகவ்வும்’ வெற்றி படத்தை இயக்கிய நலன் குமாரசாமி இயக்குகிறார்.

இந்த படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்க, மடோனா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் சமுத்திரகனி நடிக்கின்றார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, லியோஜான் பால் படத்தொகுப்பை கவனிக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;