ஆஸ்கர் விருதை வெல்லுமா கோர்ட்?

ஆஸ்கர் விருதை வெல்லுமா கோர்ட்?

செய்திகள் 24-Sep-2015 2:25 PM IST VRC கருத்துக்கள்

சினிமாவை பொறுத்தவரை உலகின் மிகப் பெரிய விருதாக கருதப்படுவது ‘ஆஸ்கர் விருது’தான்! ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஆஸ்கர் விருது போட்டிக்கு வெளிநாட்டு படப் பிரிவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த திரைப்படங்கள் போட்டியிடுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் இப்போட்டிக்கு இந்தியாவிலிருந்தும் திரைப்படங்கள் அனுப்புவது வழக்கம்! இந்த வருட ஆஸ்கர் போட்டிக்கு ‘கோர்ட்’ என்ற மராத்தி படம் தேர்வாகியுள்ளது. பிரபல ஹிந்திப் பட இயக்குனரும், நடிகருமான அமோல் பலேகர் தலைமையிலான குழு இப்படத்தை தேர்வு செய்துள்ளது. தென்னிந்தியாவிலிருந்து மணிகண்டன் இயக்கிய ‘காக்கா முட்டை’, ராஜமௌலி இயக்கிய ‘பாகுபலி’ ஆகிய படங்களுடன் பிரியங்கா சோப்ரா நடித்த ‘மேரி காம்’, அமீர்கான் நடித்த ‘பீகே’ ஆகிய ஹிந்திப் படங்களும் ஆஸ்கர் விருதுக்கான தேர்வில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகியுள்ள ‘கோர்ட்’ படத்தை சைதன்ய தமான்னே இயக்கியுள்ளார். சமூகத்துக்காக போராடும் வயதான ஒரு கவிஞர் நீதிமன்றத்தில் தன் மீது போடப்பட்ட வழக்கை எப்படி எதிர்கொள்கிறார் என்ற கருவை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படம், இந்திய நீதித்துறையின் செயல்பாடுகள் பற்றி கேள்விகளை எழுப்பும் படமாகவும் அமைந்துள்ளதாம். இந்த படத்திற்கு ஏற்கெனவே தேசிய விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ‘கோர்ட்’ ஆஸ்கர் விருதை வென்று வருமா? என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டெர்மினேட்டர் ஜெனிசிஸ் - டிரைலர்


;