உலக அளவில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த அஜித்!

உலக அளவில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த அஜித்!

செய்திகள் 24-Sep-2015 10:32 AM IST VRC கருத்துக்கள்

‘வீரம்’ சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் அவரது 56-வது படத்திற்கு என்ன தலைப்பு வைப்பார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர் அவரது ரசிகர்கள். அந்த எதிர்பார்ப்பு நேற்று இரவு 12 மணியுடன் முடிவுக்கு வந்தது. ஏற்கெனவே ரசிகர்களின் கணிப்பில் இருந்து வந்த பல்வேறு தலைப்புகளை தவிர்த்து விட்டு யாரும் எதிர்பார்க்காத விதமாக ‘தல’ படத்திற்கு ‘வேதாளம்’ என்று டைட்டில் சூட்டியுள்ளனர். ‘வேதாளம்’ என்ற டைட்டிலுடன் கூடிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் அஜித்தின் கெட்-அப் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியுற செய்யும் விதமாக வித்தியாசமாக அமைந்துள்ளது. இந்த கெட்-அப் அஜித் ஏற்கெனவே நடித்த ‘ரெட்’ படத்தை கொஞ்சம் ஞாபகபடுத்தும் விதமாக அமைந்திருக்கிறது என்றாலும் கதையில் அவரது கேரக்டர் ரொம்பவும் வித்தியாசமாக இருக்கும் விதத்தில் ‘வீரம்’ சிவா அமைத்திருப்பார் என்பது நிச்சயம்! ‘வேதாளம்’ ஃபர்ஸ்ட் லுக் நேற்று இரவு வெளியானதும் உலக அளவில் டிவிட்டர் டிரெண்டில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் படத்திற்கு முன் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியான நேரத்திலும் அது டிவிட்டரில் டிரென்டில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;