நாசர் முக்கிய வேடமேற்கும் குற்றம் நடந்தது என்ன?

நாசர் முக்கிய வேடமேற்கும் குற்றம் நடந்தது என்ன?

செய்திகள் 23-Sep-2015 4:19 PM IST VRC கருத்துக்கள்

ஜி.வி.பி. பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஜி.வி.பெருமாள் தயாரிக்கும் படம் ’குற்றம் நடந்தது என்ன’. இப்படத்தில் விக்னேஷ் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். இவர் விஜய் டி.வி.யில் ‘விஜே’ வாக இருப்பவர். மற்றும் ஸ்ரீதேஜா, பாலு, இருவரும் விக்னேஷ்கார்த்திக்குடன் இன்னைந்து நாயகர்களாக நடிக்கிறார்கள். படத்தின் முக்கிய கதாப்பாத்திரன் ஒன்றில் நாசர் நடிக்கிறார். நாயகிகளாக பிரியா, ஊர்மிளா ஷெட்டி ஆகியோர் நடிக்கிறார்கள். பாலிவுட்டில் பிரபல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சசிதர் இந்த படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். படம் குறித்து சசிதர் கூறும்போது,
‘‘தென்றலாக வீசும் காற்றுதான் புயலாகவும், அமைதியான நடுக்கடல் தான் சுனாமியாகவும் மாறுகிறது. அதைப் போல மென்மையான குணாதிசயம் கொண்ட ஒரு பெண் எப்படி அதிபயங்கர குணம் கொண்டவளாக மாறுகிறாள் என்பது தான் இப்படத்தின் கதை. இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகா, ஆந்திரா, சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. இதில் நாசர் சார் முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். விரைவில் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு கிடாயின் கருணை மனு - டிரைலர்


;