அஜித் பட தலைப்பு இன்று இரவு அறிவிப்பு!

அஜித் பட தலைப்பு இன்று இரவு அறிவிப்பு!

செய்திகள் 23-Sep-2015 3:35 PM IST VRC கருத்துக்கள்

‘வீரம்’ சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் அவரது 56-வது படத்தின் தலைப்பு என்ன என்பதை இன்று இரவு அறிவிக்க இருக்கிறார்கள். டைட்டிலுடன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் இன்று இரவு வெளியிடப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நாளிலிருந்தே ‘தல’ ரசிகர்களிடையே இப்படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ‘தல-56’க்கு ‘அடங்காதவன்’, ‘ஆரவாரம்’, ‘சரவெடி’ என பல தலைப்புகள் அடிப்பட்டாலும் இதில் எந்த தலைப்பையும் படக்குழுவினரால் உறுதிச் செய்யப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் இந்த பட தலைப்பு விஷயம் இன்று இரவு முடிவுக்கு வரவிருக்கிறது. இதனால் தல ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு மீண்டும் அஜித்தை வைத்து ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க, அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் முடிந்துவிட்டது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;