ரஜினி டயலாக்கில் புதிய படம்!

ரஜினி டயலாக்கில் புதிய படம்!

செய்திகள் 23-Sep-2015 12:37 PM IST VRC கருத்துக்கள்

ஜி, தீ, ஈ, லீ, நீ, தா, வா, கோ, உ ஆகிய ஒற்றைச் சொல்லில் வந்த படங்கள் வரிசையில் மற்றுமொரு ஒற்றை எழுத்து படம் ‘வி’. ‘முன் பகல் செய்யின் பிறபகல் தாமே விளையும்’ என்ற அறிவுரையை மையமாக வைத்து, ‘சிவாஜி’ படத்தில் ரஜினிகாந்த் பேசிய வசனமான ‘சாகிற நாள் தெரிந்து விட்டால் வாழ்கின்ற நாள் நரகமாகி விடும்’ என்ற கருத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் இது.

இப்படத்தில் புதுமுகங்கள் ராகவ், சத்யதாஸ், ரிஷி, திவ்வின், பினீஷ், ருதியா, தேவிசூர்யா, நிமா, அஸ்வினி, வில்ஜியா என ஐந்து ஜோடிகளுடன் ஆர்.என்.ஆர்.மனோகர், சபிதா ஆனந்த், ரோஷினி ஆகியோரும் நடித்துள்ளனர். ‘ட்ரூ சோல் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் ரூபேஷ்குமார் தயாரித்துள்ள இந்த ஹாரர் த்ரில்லர் படத்தை டாவின்சி இயக்கியுள்ளார். கன்னட மொழியில் ஒரு படத்தை இயக்கியுள்ள டாவின்சி தமிழில் இயக்கும் முதல் படம் இது.
இந்தப் பத்திற்கு இளங்கோ கலைவாண்ன் இசை அமைத்திருக்கிறா.ர் ஒளிப்பதிவை அனில்குமாரும், படத்தொகுப்பை வி.ஸ்ரீஜித்தும் கவனித்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று காலை சென்னை கமலா தியேட்டரில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் பாபி சிம்ஹா, அபி சரவணன், சபிதா ஆனந்த், ‘ஸ்டுடியோ கிரீன்’ சக்திவேல் உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு ‘வி’ படக்குழுவினரை வாழ்த்திப் பேசினார்கள். 5 ஹீரோக்கள் 5 ஹீரோயின்கள் என முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இப்படம் அடுத்த மாதம் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பஞ்சுமிட்டாய் - டிரைலர்


;