சிம்பு எடுத்த அதிர்ச்சி முடிவு!

சிம்பு எடுத்த அதிர்ச்சி முடிவு!

செய்திகள் 23-Sep-2015 10:14 AM IST Chandru கருத்துக்கள்

மனதில் பட்டதை வெளிப்படையாகவும், தைரியமாகவும் பேசக்கூடிய திரையுலக பிரபலங்களில் சிம்புவும் ஒருவர். அதனாலேயே அவரின் ட்விட்டர் கணக்கை பல லட்சம் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். தன்னுடைய கருத்துக்களையும், தன் படங்கள் குறித்த செய்திகளையும் தனது ட்வீட் மூலம் நேரடியாக ரசிகர்களின் பார்வைக்கு வைத்துக் கொண்டிருந்த சிம்பு, திடீரென ட்விட்டரிலிருந்து விலகப்போவதாக அறிவித்திருக்கிறார். இதனால் அவருடைய ரசிகர்கள் பலரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து கடைசியாக அவர் நேற்று, ‘‘இதுவரை ட்விட்டரில் என்னைப் பின்தொடர்ந்து வந்த ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது நன்றிகள். எனது ட்விட்டர் கணக்கு விரைவில் ரசிகர் மன்றத்தினரால் கையாளப்பட உள்ளது. எதிர்காலத்தில் மீண்டும் இந்த கணக்கை நானே கையாள வேண்டிய சூழ்நிலை வரும்பட்சத்தில் மட்டுமே நான் திரும்பி வருவேன். மற்றபடி ஒரு நடிகர், ரசிகர்களுடன் தரமான படங்கள் கொடுப்பதன் மூலமாகவே தொடர்பில் இருக்கலாம். என்னுடைய முடிவை ரசிகர்கள் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன். நீங்க இல்லாம நான் இல்ல!’’ என்று ட்வீட் செய்திருக்கிறார்.உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;