4 நாட்களில் 13 கோடி வசூல் செய்த ‘மாயா’!

4 நாட்களில் 13 கோடி வசூல் செய்த ‘மாயா’!

செய்திகள் 22-Sep-2015 2:33 PM IST Chandru கருத்துக்கள்

நயன்தாரா நடிப்பில் கடந்த 17ஆம் தேதி வெளியான ‘மாயா’ படத்திற்கு அனைத்துத்தரப்பு ரசிகர்களிடத்திலும் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான இந்த சூப்பர்நேச்சுரல் ஹாரர் படத்தை அறிமுக இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கிறார். ஆரி, அம்ஜத், மைம் கோபி, ஷரத், ரேஷ்மி மேனன், லக்ஷ்மி ப்ரியா, ரோபோ ஷங்கர் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய, ரான் யோஹன் இசையமைத்திருக்கிறார்.

ஸ்ரீதேனானண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியீடு செய்தது. 250 திரையரங்குகளுக்கும் மேல் வெளியான இப்படத்தின் முதல் 4 நாட்கள் தமிழக கலெக்ஷன் மட்டுமே 6 கோடியைத் தாண்டியிருக்கிறது. இதுதவிர தெலுங்கில் ‘மயூரி’ என்ற பெயரில் வெளியான இப்படம் அங்கே அதிரி புதிரி ஹிட்டடித்திருக்கிறது. ஆரம்பத்தில் 250 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இப்படம் தற்போது 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதுதவிர வெளிநாடுகளிலும் ‘மாயா’ படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்க, ஒட்டுமொத்தமாக உலகளவில் 13 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக ‘மாயா’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

நாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு படத்திற்கு இத்தனை பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதால் சந்தோஷத்திலிருக்கிறது ‘மாயா’ டீம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - டீசர்


;