விக்ரம் படத்துடன் ரிலீசாகும் ‘டார்லிங்-2’

விக்ரம் படத்துடன் ரிலீசாகும் ‘டார்லிங்-2’

செய்திகள் 22-Sep-2015 12:47 PM IST VRC கருத்துக்கள்

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ திரைப்படத்தை வெளியிட்ட ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்து ரிலீசாகவிருக்கும் படம் ‘டார்லிங்-2’. ஏற்கெனவே ‘ஜின்’ என்ற பெயரில் எடுக்கப்பட்டு வந்த படமே இப்போது ‘டார்லிங்-2’வாக பெயர் மாறியுள்ளது. ஏற்கெனவே ‘ஸ்டுடியோ கிரீன்’ தயாரிப்பில் ஜி.பி.பிரகாஷ் குமார் நடித்து சூப்பர் ஹிட்டான ‘டார்லிங்’ பட கதையை போலவே இப்படமும் ஃப்ரெண்ட் ஷிப், ஹாரர், ரொமாண்டிக் விஷயங்களை சொல்லும் படமாக அமைந்திருப்பதால் தான் இப்படத்திற்கு ‘டார்லிங்-2’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம். ‘டார்லிங்-2’வில் ‘மெட்ராஸ்’ பட புகழ் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் காளி வெங்கட், அர்ஜுனன், ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்த இன்னொரு நடிகரான ஹரி ஆகியோர் நடிக்க, சதீஷ் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். இந்த படத்தை அடுத்த மாதம் 21-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியிட திட்டமிட்டுள்ளது. ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம்! இதே தினம் தான் விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடித்துள்ள ‘பத்து எண்றதுக்குள்ள’ படமும் ரிலீசாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாயவன் மேக்கிங் வீடியோ


;