மணிரத்னம் படத்தில் கீர்த்தி சுரேஷ், நித்யா மேனன்!

மணிரத்னம் படத்தில் கீர்த்தி சுரேஷ், நித்யா மேனன்!

செய்திகள் 22-Sep-2015 11:10 AM IST VRC கருத்துக்கள்

துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்து, மணிரத்னம் இயக்கிய ‘ஓகே கண்மணி’ வெற்றிபெற்றதை தொடர்ந்து தனது அடுத்த பட வேலைகளில் பிசியாகி விட்டார் மணிரத்னம். ‘ஒகே கண்மணி’ பட வரிசையில் தனது அடுத்த படத்தின் கதையையும் ‘யூத்’ஸை மனதில் வைத்து எழுதி வருகிறார் மணிரத்னம் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் கார்த்தி, துல்கர் சல்மான் என இரண்டு ஹீரோக்கள் நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக ‘ஓகே கண்மணி’ படத்தில் நடித்த நித்யா மேனனும், கீர்த்தி சுரேஷும் நடிக்க இருக்கிறார்கள். அத்துடன் இப்படத்திலும் மணிரத்னத்தின் ஆஸ்தான இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இணைகிறார். மணிரத்னம் இயக்கிய பெரும்பாலான படங்களில் ராஜீவ் மேன்ன, ரவி.கே.சந்திரன், பி.சி.ஸ்ரீராம் முதலானோர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருப்பார்கள். ஆனால் இப்படத்தினை ஒளிப்பதிவளர் ரவிவர்மனை வைத்து படம் பிடிக்க திட்டமிட்டுள்ளாரம் மணிரத்னம். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;