கனடா, மும்பை திரைப்பட விழாக்களில் கிருமி!

கனடா, மும்பை திரைப்பட விழாக்களில் கிருமி!

செய்திகள் 22-Sep-2015 10:37 AM IST VRC கருத்துக்கள்

ஜே.பி.ஆர்.ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘கிருமி’. ‘காக்கா முட்டை’ படப் புகழ் மணிகண்டனும், அவரது உதவியாளர் அனுசரணும் இணைந்து இப்படத்தின் கதையை எழுதியிருக்க, அனுசரண் இயக்கியுள்ள இப்படம் நாளை மறுநாள் (24-9-15) ரிலீசாகவிருக்கிறது. ‘மதயானை கூட்டம்’ படத்தில் நடித்த கதிர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் கதாநாயகியாக ரேஷ்மி மேனன் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலரும், பாடல்களும் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருப்பதோடு, இப்படம் கனடாவில் நடைபெறவிருக்கும் 19th Toronto Reel Asian International Film Festival மற்றும் மும்பையில் நடைபெறவிருக்கும் திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தேர்வாகியுள்ளது. சமீபத்தில் வெளியான ‘காக்கா முட்டை’, நாளை மறுநாள் ரிலீசாகவிருக்கும் ‘குற்றம் கடிதல்’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு முன்பாகவே பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை அள்ளிய படங்களாகும். அந்த வரிசையில் ரிலீசுக்கு முன்பாகவே திரைப்பட விழாக்களில் திரையிட தேர்வாகியுள்ள ‘கிருமி’ திரைப்படமும் விருதுகளை வாங்கி குவிக்குமா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆண்டவன் கட்டளை - டீசர்


;