‘தல 56‘ல் ‘ரெட்’ அஜித்!

‘தல 56‘ல் ‘ரெட்’ அஜித்!

செய்திகள் 21-Sep-2015 11:58 AM IST Chandru கருத்துக்கள்

அஜித்தின் 56வது படத்தின் படப்பிடிப்பு ஜெட் வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் இப்படத்தின் ஃப்ளாஷ்பேக் ஒன்றில் அஜித்திற்கு வித்தியாசமான வேடம் வேண்டும் என முடிவு செய்திருந்தாராம் இயக்குனர் சிவா. அதற்காக படம் முழுவதும் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வலம் வரும் அஜித், இந்த ஃப்ளாஷ்பேக் காட்சியில் மொட்டையடித்து லேசாக முடி வளர்ந்ததுபோன்ற தோன்றத்துடன் நடிக்கிறாராம்.

2002ல் சிங்கம்புலி இயக்கத்தில் வெளிவந்த ‘ரெட்’ படத்தில் தாதாவாக நடித்த அஜித் மொட்டையடித்து வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருந்தார். கிட்டத்தட்ட இதேபோன்ற தோற்றத்தில்தான் ‘தல 56’ படத்தின் கடந்த கால காட்சிகளில் நடிக்கிறார் அஜித். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரவாரம், அடங்காதவன், சரவெடி என இப்படத்திற்கு வைக்கப்படும் பெயர் குறித்து பல கிசுகிசுக்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஏண்டா தலையில எண்ண வெக்கல - டீசர்


;