விஜய் 59-ல் ராஜேந்திரனின் புதிய வேடம்

விஜய் 59-ல் ராஜேந்திரனின் புதிய வேடம்

செய்திகள் 21-Sep-2015 10:55 AM IST VRC கருத்துக்கள்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க, வில்லனாக இயக்குனர் மகேந்திரன் நடிக்கிறார். இப்படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த படத்தில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரனும் இணைந்துள்ளார். அவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அதாவது போலீஸ் அதிகாரியாக வரும் விஜய்யின் ஜீப் டிரைவராக வருகிறாராம் ராஜேந்திரன். முதலில் இந்த கேரடக்ருக்கு நிறைய நடிகர்களை பரிசீலனை செய்துள்ளார் இயக்குனர் அட்லீ! இதுவரை விஜய்யுடன் நடிக்காத ஒரு நடிகர் அந்த கேரக்டரில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்த அட்லீ கடைசியில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரனை தேர்வு செய்துள்ளார். இந்த படத்தில் விஜய், ராஜேந்திரன் சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகளை மிக வித்தியாசமான முறையில் படமாக்கப்பட உள்ளதாம்! ‘புலி’ படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். இது அட்லீ இயக்கும் இரண்டாவது படம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;