தனுஷை தொடர்ந்து ஆர்யா!

தனுஷை தொடர்ந்து ஆர்யா!

செய்திகள் 21-Sep-2015 10:40 AM IST VRC கருத்துக்கள்

‘ஏ.ஜி.எஸ்.’ நிறுவனம் தயாரிப்பில் சமீபத்தில் ரிலீசாகி சூப்பர் ஹிட்டான படம் ‘தனி ஒருவன்’. ‘ஜெயம்’ ரவி கதாநாயகனாக நடித்த இப்படத்தை தொடர்ந்து ஆர்யாவை வைத்து ஒரு படத்தை தயாரிக்க ‘ஏ.ஜி.எஸ்.’ நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த படத்தை ‘ஏ.ஜி.எஸ்.’ நிறுவனத்திற்காக ‘அனேகன்’ படத்தை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இது சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து வருவதாகவும் இப்படம் குறித்த அதிகாரபூர்வமான தகவல்களை விரைவில் வெளியிட இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. ஏற்கெனவே அஜித், சிவகார்த்திகேயன் ஆகியோரை வைத்து படம் இயக்கப் போகிறார் கே.வி.ஆனந்த் என்ற தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அந்த செய்திகளை மறுத்திருந்தார் கே.வி.ஆனந்த். ஆனால் தனுஷை தொடர்ந்து ஆர்யாவை இயக்க இருக்கிறார் கே.வி.ஆனந்த என்பது உறுதி என்கிறார்கள். சமீபத்தில் வெளியான ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’, ‘யட்சன்’ ஆகிய படங்களை தொடர்ந்து ஆர்யா தற்போது ‘இஞ்சி இடுப்பழகி’ மற்றும் மலையாள ‘பெங்களூர் டேஸ்’ படத்தின் தமிழ் ரீ-மேக்கில் நடித்து வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - நீண்ட நான் பாடல்


;