உற்சாகத்தில் ‘விஜய் 59’ இயக்குனர் அட்லி!

உற்சாகத்தில் ‘விஜய் 59’ இயக்குனர் அட்லி!

செய்திகள் 21-Sep-2015 9:56 AM IST Chandru கருத்துக்கள்

‘ராஜா ராணி’ மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கிய ஷங்கரின் உதவியாளரான அட்லி, தனது இரண்டாவது படத்திலேயே உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய்யை இயக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். ‘புலி’ படத்தைத் தொடர்ந்து தற்போது விஜய் நடித்து வரும் இப்படத்தில் அவருக்கு போலீஸ் கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதிக எதிர்பார்ப்புள்ள படங்களில் ஒன்றாக உருவாகி வரும் இப்படத்தின் இயக்குனரான அட்லிக்கு இன்றைய நாள் மிக முக்கியமான நாள். ஆம்... இன்று (செப்டம்பர் 21) அவரின் பிறந்தநாள். தனது 29வது வயதில் அடியெடுத்து வைக்கும் அட்லி, குடும்பத்தலைவராகக் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதோடு, விஜய் பட இயக்குனர் என்ற பெயரும் கிடைத்துள்ளதால் உற்சாகத்தில் மிதக்கிறார். சமூக வலைதளங்களில் திரையுலக பிரபலங்கள் மட்டுமின்றி, விஜய் ரசிகர்களும் அட்லிக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணமுள்ளனர்.

தனது முதல் படத்தைப் போலவே மேலும் பல வெற்றிகளை குவிக்க அட்லிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது நமது ‘டாப் 10 சினிமா’ இணையதளம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;