இந்தியாவிலேயே இப்போ நம்பர் ஒன் விஜய்தான்!

இந்தியாவிலேயே இப்போ நம்பர் ஒன் விஜய்தான்!

செய்திகள் 19-Sep-2015 11:20 AM IST Chandru கருத்துக்கள்

இந்த சாதனைக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தார்கள் ‘இளையதளபதி’ விஜய் ரசிகர்கள். பொதுவாக அஜித் படங்கள் செய்யும் சாதனையை விஜய் படங்களும், விஜய் படங்கள் செய்யும் சாதனையை அஜித் படங்களும் முறியடிக்க வேண்டும் என்பதே அந்தந்த நடிகர்களுடைய ரசிகர்களின் வெறித்தனமான ஆசையாக இருக்கும். அப்படி அஜித் படம் செய்த ஒரு சாதனையை விஜய் படமான ‘புலி’ சமீபத்தில் முறியடித்தது. அதோடு மட்டுமல்லாமல், அந்த சாதனை தற்போது இந்திய அளவில் முதலிடத்தையும் பிடித்திருக்கிறது.

‘என்னை அறிந்தால்’ படத்தின் டீஸர் 97 ஆயிரம் லைக்குகளைப் பெற்றிருந்தது. அந்த சாதனையை சமீபத்தில் ‘புலி’ பட டிரைலர் முறியடித்து 1 லட்சம் லைக்குகளைப் பெற்றது. இந்திய அளவில் சல்மானின் ‘கிக்’ பட டிரைலரே இதுவரை 1,01,855 லைக்குகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது. இப்போது அந்த சாதனையையும் முறியடித்து நம்பர் ஒன் இடத்தை கைப்பற்றியிருக்கிறார் விஜய். ஆம்... ‘புலி’ பட டிரைலர் ஒரு லட்சத்தி இரண்டாயிரம் லைக்குகளுக்கு மேல் வாங்கிவிட்டது.

(இந்த டிரைலருக்கு 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிஸ்லைக்குகள் கிடைத்திருப்பது தனிக்கதை!)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;