3 கதாநாயகிகளுடன் மகேஷ் பாபு நடிக்கும் பிரம்மோற்சவம்!

3 கதாநாயகிகளுடன் மகேஷ் பாபு நடிக்கும் பிரம்மோற்சவம்!

செய்திகள் 18-Sep-2015 12:21 PM IST Top 10 கருத்துக்கள்

தெலுங்கு பட உலகில் ‘பிரின்ஸ்’ என்று அழைக்கப்படும் மகேஷ் பாபு நடித்து சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘ஸ்ரீமந்துடு’ (தமிழில்- செல்வந்தான்). இப்படத்தை தொடர்ந்து மகேஷ் பாபு நடிக்கும் பட்த்திற்கு ‘பிரம்மோற்சவம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை ஸ்ரீகாந்த் அதாலா இயக்குகிறார். சென்டிமென்ட் கலந்த குடும்ப கதையாக உருவாகும் இப்படத்தில் மகேஷ் பாபுவுடன் சமந்தா, காஜல் அகர்வால், பிரணிதா என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இவர்களுடன் சத்யராஜ், ரேவதி ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். ரஜினியின் ‘எந்திரன்’ படம் உட்பட பல படங்களில் ஒளிப்பதிவாளக பணியாற்றிய ரத்னவேலு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு மிக்கி ஜே.மேயர் இசை அமைக்கிறார். கலை இயக்குனராக தோட்டதரணி பணியாற்றுகிறார். ‘பிவிபி சினிமாஸ்’ மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் திருப்பதியில் நடைபெற்றது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;