சி.வி.குமாரின் புதிய அவதாரம்!

சி.வி.குமாரின் புதிய அவதாரம்!

செய்திகள் 18-Sep-2015 11:27 AM IST VRC கருத்துக்கள்

புதிய தலைமுறை இயக்குனர்களை ஊக்குவித்து, தனது ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’ பட நிறுவனம் மூலம் அறிமுகப்படுத்தி பல வெற்றிப் படங்களை வழங்கியவர் சி.வி.குமார். இவர் அடுத்து இயக்குனரக புதிய அவதாரமெடுக்கிறார். இவர் இயக்கும் முதல் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுதிப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். சி.வி.குமாரின் ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனமும், கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை லியோ ஜான் பால் கவனிக்க, கோபி ஆனந்த் கலை இயக்குனராக பணி புரிகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 5-ஆம் தேதி துவங்குகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொடக்கு ஆடியோ பாடல்


;