சந்திரமுகி, அந்நியன் வரிசையில் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’

சந்திரமுகி, அந்நியன் வரிசையில் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’

செய்திகள் 16-Sep-2015 4:50 PM IST VRC கருத்துக்கள்

முதலில் ‘டெய்சி’ என்று தலைப்பிடப்பட்டு பிறகு படத்தின் கதையின் தன்மைக்கு ஏற்றவாறு அஜித் படப் பாடல் வரியான 'உனக்கென்ன வேணும் சொல்லு' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. அமானுஷ்ய சக்தியைப் பற்றிய கதையை கொண்ட இப்படத்தில் தீபக் பரமேஷ், ஜாக்லின் பிரகாஷ், குணாலன் மோகன், மோர்ணா, அனிதா ரெட்டி, மைம் கோபி முதலானோர் நடித்துள்ளனர். ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கியிருக்கும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. விரைவில் ரிலீசாகவிருக்கும் இப்படத்தின் பத்திரிகையாள்ர் சந்திப்பில் படத்தின் டிரைலரும், படத்தின் கிளைமேக்ஸில் இடம் பெறும் ஒரு காட்சியையும் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து படத்தின் இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் பேசும்போது,

‘‘Hypnotherapy-யை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் இது. ஏற்கெனவே பாபா, சந்திரமுகி அந்நியன், அனேகன் உட்பட பல படங்களில் ஹிப்னா தெராபி விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். ஆனால் இப்படத்தின் கதைக்களம் முற்றிலும் புதுசு. எனது நண்பர் ஒருவரின் மனைவி வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் பின்னணியில் உருவாக்கப்பட்ட கதை இது. பேய், ஹாரர் பட சீஸன் இது. ஆனால் தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த பேய் படங்களிலிருந்து இப்படம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். கருவிலியே இறந்து போகும் ஒரு குழந்தையின் ஆத்மா தனது அப்பா, அம்மாவை தேடும் படலம் தான் படத்தின் மைய கரு! அதை சென்டிமென்ட், திகில் கலந்து வித்தியாசமாக சொல்லியிருக்கிறேன். இதுவரை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களை மட்டுமே வாங்கி வெளியிட்டு வந்த நிறுவனம் ‘Auraa Cinemas’. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் மகேஷ்! இவர் இந்த படத்தை பார்த்ததும், இப்படத்தை நானே வெளியிடுகிறேன் என்று சொல்லி இப்படத்தின் உரிமையை வாங்கியுள்ளார். அவர் தனது முதல் தமிழ் திரைப்பட வெளியீடாக இப்படத்தை விரைவில் உலகம் முழுக்க வெளியிட இருக்கிறார்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவி - கொக்கா மக்கா பாடல் வீடியோ


;