விக்ரம் பிரபு, ஷாம்லி இணையும் வீரசிவாஜி!

விக்ரம் பிரபு, ஷாம்லி இணையும் வீரசிவாஜி!

செய்திகள் 16-Sep-2015 12:07 PM IST VRC கருத்துக்கள்

‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘மெட்ராஸ் என்டர்பிரைசஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம் ‘வீரசிவாஜி’. இந்தப் படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினியின் தங்கை ஷாம்லி நடிக்கிறார். இவர்களுடன் ‘ரோபோ’ சங்கர், ஜான் விஜய், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கிறார்கள். கணேஷ் விநாயக் எழுதி இயக்கும் இப்படத்தின் துவக்க விழா இன்று காலை பாண்டிச்சேரியில் நடைபெற்றது. இவிவிழாவில் நடிகர் பிரபு, புனிதா பிரபு, இயக்குனர் லக்‌ஷமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இப்படத்தின் ஒளிப்பதிவை சுகுமார் கவனிக்க, டி.இமான் இசை அமைக்கிறார். பூஜையை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் - டிரைலர்


;