சர்வதேச திரைப்பட விழாவில் கிருமி!

சர்வதேச திரைப்பட விழாவில் கிருமி!

செய்திகள் 16-Sep-2015 11:53 AM IST VRC கருத்துக்கள்

‘மதயானை கூட்டம்’ படத்தில் நடித்த கதிர் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘கிருமி’. நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் ஆகியோரிடம் உதவியாளராக இருந்த ஜெயராமன் மற்றும் எஸ்.ராஜேந்திரன், பிருத்திவிராஜ், கே.ஜெயராம ஆகியோர் ஜே.பி.ஆர்.ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை அனுசரண் இயக்கியுள்ளார். இப்படத்தின் கதையை அனுசரணும், ‘காக்கா முட்டை’ புகழ் மணிகண்டனும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். இவர்கள் இருவரும் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அனுசரண் இயக்கியுள்ள ‘கிருமி’ திரைப்படமும் மணிகண்டன் இயக்கிய ‘காக்கா முட்டை’ படம் மாதிரி இயல்பான கதை மற்றும் காட்சி அமைப்புகளுடன் படம் பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ‘கிருமி’ திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவும் தேர்வாகியுள்ளது.

திருடன், போலீஸ் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் ஒரு இளைஞர் நேர்மையான முறையில் போலீஸுக்கு உதவப் போய் எப்படியெல்லாம் எமாற்றப்படுகிறார் என்பதை விறுவிறுப்பாக சித்தரிக்கப்பட்டுள்ள படமாம் கிருமி! இப்படத்தில் கதிருக்கு ஜோடியாக ரேஷ்மி மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் சார்லி, டேவிட், தீனா, யோகி பாபு, ,மாரிமுத்து, தமிழ் செல்வி, தென்னவன், மகேந்திரன், வனிதா, ரவி வெங்கட்ராம் என பலர் நடித்துள்ளனர். கே இசை அமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வருகிற 24-ஆம் தேதி ரிலீசாகவிருக்கும் இப்படத்தை தமிழகம் முழுவதும் ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ்’ எஸ்.மதன் வெளியிடுகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கிருமி - டிரைலர்


;