‘புலி’யை பார்க்க அனைவருக்கும் அனுமதி!

‘புலி’யை பார்க்க அனைவருக்கும் அனுமதி!

செய்திகள் 16-Sep-2015 10:25 AM IST VRC கருத்துக்கள்

அடுத்த மாதம் 1-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது விஜய்யின் ‘புலி’. கடந்த சில மாதங்களாக நடந்து வந்த இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மற்றும் கிராஃபிக்ஸ் வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டதை தொடர்ந்து இப்படம் நேற்று சென்சாருக்குச் சென்றது. இப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்தில் எங்கும் கட் கொடுக்கவில்லையாம். இதனை தொடர்ந்து அனைத்து வயதினரும் பார்க்கக் கூடிய படம் என்ற வகையில் ‘புலி’க்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். இதனால் ‘புலி’ படக்குழுவினர் மேலும் மகிழ்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள். சிம்புதேன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், பிரபு முதலானோர் நடித்துள்ள இப்படத்தை எஸ்.கே.டி.ஸ்டுடியோஸ் நிறுவனம் சாபில் பி.டி.செல்வகுமார், ஷிபு தமீன் இருவர் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாந்த இசை அமைத்துள்ளார். ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வரும் ‘புலி’ படம் அடுத்த மாதம் 1-ஆம் தேதி உலகம் முழுக்க அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;