சல்மான் கானுக்குப்பிறகு விஜய் செய்யவிருக்கும் சாதனை!

சல்மான் கானுக்குப்பிறகு விஜய் செய்யவிருக்கும் சாதனை!

செய்திகள் 15-Sep-2015 1:37 PM IST Chandru கருத்துக்கள்

இந்திய அளவில் நடிகர் சல்மான் கானின் இந்த சாதனையை வேறு எந்த நடிகரும் இதுவரை செய்தததில்லை. கடைசியாக நடிகர் அஜித் இந்த சாதனைக்கு மிக நெருக்கத்தில் வந்தார். ஆனால் அவரும் அந்த சாதனையை நிகழ்த்தவில்லை. அவருக்குப் பிறகு ‘இளையதளபதி’ விஜய்யே அந்த சாதனையை மிக வேகமாக நெருங்கி வருகிறார். அப்படி என்ன சாதனை என்று கேட்கிறீர்களா...?

2014ல் வெளிவந்த சல்மான் கானின் ‘கிக்’ பட டிரைலர் யு டியூப்பில் 1 லட்சம் லைக்குகளைப் பெற்று சாதனை படைத்தது. இதுவரை வேறு எந்த இந்திய மொழி படத்தின் டிரைலர்/டீஸர் எதுவுமே இந்த சாதனையை எட்டவில்லை. அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ டீஸர் இதற்கடுத்தபடியாக 95 ஆயிரம் லைக்குகள் வரை பெற்றது. இதனை முறியடித்து ‘புலி’ பட டிரைலர் தற்போது 98 ஆயிரம் லைக்குகளைப் பெற்றிருக்கிறது. இப்படம் ரிலீஸாவதற்குள் 1 லட்சம் லைக்குகளை எட்டும்பட்சத்தில் சல்மான் கானுக்குப் பிறகு இந்த சாதனையைச் செய்த ஒருவராக விஜய்யும் இடம்பிடிப்பார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;