நாகார்ஜுனா - கார்த்தி நடிக்கும் படத்தின் தலைப்பு?

நாகார்ஜுனா - கார்த்தி நடிக்கும் படத்தின் தலைப்பு?

செய்திகள் 15-Sep-2015 12:17 PM IST Chandru கருத்துக்கள்

‘பி.வி.பி. சினிமா’ நிறுவனம் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரிக்கும் புதிய படத்தில் கார்த்தி, நாகார்ஜுனா, தமன்னா முதலானோர் நடித்து வருகிறார்கள். வம்சி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏராளமான பொருட்செலவில் தயாராகி வரும் இப்படத்திற்கு பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பாவிலுள்ள முக்கிய நகரங்களில் கிட்டத்தட்ட ஒரு மாதம் நடைபெற்றது.

இந்நிலையில் இதுவரை பெயரிடப்படாத இப்படத்தின் தலைப்பையும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் விநாயகர் சதுர்த்தியின் மறுநாளான செப்டம்பர் 18ஆம் தேதி வெளியிடவிருக்கிறார்கள். இந்த வருட இறுதியில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டிக்கெட் - டிரைலர்


;