ரீலீஸை நோக்கி சீறிப் பாயும் புலி... இன்று சென்சார்!

ரீலீஸை நோக்கி சீறிப் பாயும் புலி... இன்று சென்சார்!

செய்திகள் 15-Sep-2015 12:09 PM IST Chandru கருத்துக்கள்

அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸுக்காக பரபரப்பாக பாய்ந்து கொண்டிருக்கிறது ‘புலி’ டீம். கிராபிக்ஸ் உள்ளிட்ட வேலைகள் நிறைய இருந்ததால் செப்டம்பர் 17ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டதை அக்டோபர் 1ஆம் தேதிக்கு மாற்றி வைத்தது தயாரிப்பு நிறுவனமான எஸ்.கே.டி. ஸ்டுடியோஸ். டீஸர், டிரைலர், புரமோ பாடல் என வரிசையாக களமிறங்கிய ‘புலி’ தற்போது சென்சார் ரிசல்ட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. இன்று ‘புலி’ படத்தின் சென்சார் காட்சி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு போட்டுக் காண்பிக்கப்படவிருக்கிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கும் வகையில் சிம்புதேவன் இயக்கியுள்ள இந்த பேன்டஸி படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து எத்ததைகைய விமர்சனம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பிலும் இருக்கிறதாம் புலி படக்குழு.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - தாடிக்காரா ஆடியோ பாடல்


;