2014ல் ஜில்லா, வீரம்... 2015ல் புலி, தல 56!

2014ல் ஜில்லா, வீரம்... 2015ல் புலி, தல 56!

செய்திகள் 15-Sep-2015 10:22 AM IST Chandru கருத்துக்கள்

பிரபல நடிகர் மோகன் ராமின் மகளான வித்யூலேகா ராமன் ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். நீண்டநாட்களாக காமெடி நடிகைக்கான இடம் காலியாக இருந்து வந்ததால், வித்யூவைத் தேடி மளமளவென வாய்ப்புகள் வரத்தொடங்கின. இதனால். குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களின் படத்திலும் நடிக்கத் தொடங்கிவிட்டார். கடந்த வருடம் பொங்கலுக்கு ஒரே நேரத்தில் வெளியான விஜய்யின் ‘ஜில்லா’ படத்திலும், அஜித்தின் ‘வீரம்’ படத்திலும் நடித்திருந்தார் வித்யூலேகா.

2014ஆம் ஆண்டில் விஜய், அஜித்துடன் இணைந்த ராசியோ என்னவோ, தற்போது இந்த வருடமும் விஜய்யின் ‘புலி’ படத்திலும், அஜித்தின் ‘தல 56’ படத்திலும் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுவிட்டார் வித்யூ. சிவா இயக்கத்தில் உருவாகும் ‘தல 56’ படத்தில் அஜித்தின் தங்கையாக நடிக்கும் லக்ஷ்மிமேனனின் பக்கத்துவீட்டுப் பெண்ணாக வருகிறாராம் இவர். தொடர்ந்து விஜய், அஜித்துடன் இணைந்து நடித்து வருவதால் சந்தோஷத்தில் இருக்கிறார் அம்மணி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;