தேர்தலில் போட்டியிடுகிறார் நடிகர் சிம்பு!

தேர்தலில் போட்டியிடுகிறார் நடிகர் சிம்பு!

செய்திகள் 15-Sep-2015 10:22 AM IST Top 10 கருத்துக்கள்

நடிகர் சங்கத்திற்கு வழக்கமாக நடைபெறும் தேர்தல் போல் இல்லாமல் இந்த வருட தேர்தலில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் (அக்டோபர்) 18-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடிகர் சங்கத்தின் தலைவராக சரத்குமார் இருந்து வருகிறார். இந்த தேர்தலில் சரத்குமார் அணியை எதிர்த்து போட்டியிட நடிகர் விஷால் மற்றும் நாசர் தலைமையிலான அணி தயாராகி வருகிறது.

இந்நிலையில் சங்கத் தேர்தலில் நடிகர் சிம்புவையும் களமிறக்கியிருக்கிறது சரத்&ராதாரவி டீம். நீண்ட வருடங்களாக நடிகர் சங்கத்தின் கமிட்டி மெம்பராக இருந்துவரும் சிம்பு, இந்த தேர்தலில் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தற்போதைய தலைவர் சரத்குமார் அறிவித்தார். அதனை நடிகர் சிம்புவும் உறுதி செய்துள்ளார். சிம்புவும் களத்தில் குதித்திருப்பதால் சூடுபிடித்துள்ளது நடிகர் சங்கத் தேர்தல்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;