‘விநோதன்’ படத்தில் ‘சரபம்’ நாயகி!

‘விநோதன்’ படத்தில் ‘சரபம்’ நாயகி!

செய்திகள் 15-Sep-2015 10:22 AM IST Top 10 கருத்துக்கள்

பிரபுதேவா தமிழில் தயாரிக்கும் 3 படங்களில் ஒன்றான ‘விநோதன்’ படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அறிமுக நாயகன் வருண் நடிக்கும் இப்படத்தில் வேதிகா நாயகியாக நடிக்கிறார். புதுமுக இயக்குனர் விக்டர் ஜெயராஜ் இயக்கும் இப்படத்தில் இன்னொரு நாயகியாக நடிகை சலோனியும் சேர்க்கப்பட்டுள்ளார். திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பான ‘சரபம்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றவர் சலோனி. அதன்பிறகு பெரிய அளவில் கவனம் பெறவில்லை. இப்படத்தின் மூலம் தனக்கு மீண்டும் வெள்ளித்திரை வெளிச்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வனமகன் - டிரைலர்


;