விறுவிறு வியாபாரத்தில் 10 எண்றதுக்குள்ள!

விறுவிறு வியாபாரத்தில் 10 எண்றதுக்குள்ள!

செய்திகள் 14-Sep-2015 4:00 PM IST VRC கருத்துக்கள்

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘பத்து எண்றதுக்குள்ள’. இப்படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்தின் வியாபாரமும் சூடு பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் சிங்கிள் டிராக் ஒன்றை வருகிற விநாயக சதுர்த்தி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஷங்கரின் ‘ஐ’ படத்திற்கு பிறகு விக்ரம் நடித்து வெளிவரவிருக்கும் படம், ‘கோலிசோடா படத்திற்கு பிறகு விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியாகும் படம் இது என்பதால் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடும் உரிமையை பிரபல சத்யம் சினிமாஸ் நிறுவனம் கைபற்றியுள்ளது. ஏற்கெனவே பல வெற்றிப் படங்களை வாங்கி வெளியிட்ட சத்யம் சினிமாஸின் அடுத்த பிரம்மாண்ட வெளியீடு ‘பத்து எண்றதுக்குள்ள’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;