முதன் முதலாக மோகன்லாலுடன் ஜோடி சேரும் நமீதா!

முதன் முதலாக மோகன்லாலுடன் ஜோடி சேரும் நமீதா!

செய்திகள் 14-Sep-2015 11:01 AM IST VRC கருத்துக்கள்

சினிமாவில் ஒரு சிறிய இடைவெளியை எடுத்துக் கொண்டு, தனது எடையில் கிட்டத்தட்ட 20 கிலோவை குறைத்துக் கொண்டுள்ளார் நமீதா. இப்போது ‘ஸ்லிம்’ நமீதாவாக காட்சியளிக்கும் நமிதாவுக்கு உடனே ஒரு பட வாய்ப்பும் கிடைத்துள்ளது. தற்போது மோகன்லால் நடித்து வரும் அதிரடி ஆக்‌ஷன் மலையாள படம் ‘புலிமுருகன்’. இந்த படத்தில் மோகன்லாலுடன் ஜோடி சேருகிறார் நமீதா. இது மோகன்லாலுடன் நமீதா இணைந்து நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மம்முட்டி நடிப்பில் ‘போக்கிரி ராஜா’ படத்தை இயக்கிய வைசாக் இயக்கி வரும் இப்படம் பெரும் பொருட் செலவில் உருவாகி வருகிறது. பீட்டர் ஹெய்ன் சண்டை காட்சிகளை அமைக்கும் இப்படத்தில் கிஷோர் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் ஒரு சில காட்சிகளின் படப்பிடிப்பு சீனாவிலும் நடைபெறவிருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புலிமுருகன் - டிரைலர்


;