சீனாவில் ‘பீகே’ சாதனையை முறியடிக்குமா பாகுபலி?

சீனாவில் ‘பீகே’ சாதனையை முறியடிக்குமா பாகுபலி?

செய்திகள் 14-Sep-2015 10:47 AM IST VRC கருத்துக்கள்

ராஜமௌலியின் ‘பாகுபலி’ ஏராளமான சாதனைகள் படைத்திருப்பது அனைவருக்கும் தெரியும்! உலகம் முழுக்க பல நாடுகளில் வெளியான இப்படம் விரைவில் சீனாவிலும் ரிலீசாகவிருக்கிறது. ஆமீர்கான் நடித்த ‘பீகே’ திரைப்படத்தை சீனாவில் வாங்கி வெளியிட்ட ‘E-Star’ நிறுவனம் தான் ‘பாகுபலி’ படத்தையும் சீனாவில் வெளியிடுகிறது. இந்நிறுவனம் வெளியிட்ட ஆமீர்கானின் ‘பீகே’ ஹிந்தி திரைப்படம் சீனாவில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் மூலம் சீனாவில் அதிக வசூலை குவித்த இந்திய திரைப்படம் என்ற பெருமை ‘பீகே’வுக்கு கிடைத்தது. ‘பீகே’யை தொடர்ந்து சீனாவில் கிட்டத்தட்ட 5000 தியேட்டர்களில் ‘பாகுபலி’யை வெளியிட திட்டமிட்டுள்ளது ‘E-Star’ நிறுவனம். சீனாவில் ஆமீர்கானின் ‘பீகே’ திரைப்படம் வசூலில் நிகழ்த்திய சாதனையை, அதாவது 100 கோடி வசூலை ‘பாகுபலி’ முறியடிக்குமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்திய அளவில் அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமை தற்போது தக்கவைத்துக் கொண்டிருப்பது ராஜமௌலியின் ‘பாகுபலி’ திரைப்படம் தான்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நான் ஆணையிட்டால் - டிரைலர்


;