த்ரிஷாவைத் தொடர்ந்து தனுஷ்!

த்ரிஷாவைத் தொடர்ந்து தனுஷ்!

செய்திகள் 14-Sep-2015 10:33 AM IST Chandru கருத்துக்கள்

திரையுலக நட்சத்திரங்களுக்கும், அவர்களின் ரசிகரகளுக்குமிடையே மிகப்பெரிய பாலமாக இருப்பது சமூக வலைதளங்கள். அதிலும் ட்விட்டருக்கே இதில் முதல் இடம். இரண்டு அடிகளில் சொல்ல வந்த விஷயத்தை சொல்வது திருக்குறளுக்கு அடுத்ததாக ட்விட்டரில் மட்டுமே. அப்படிப்பட்ட ட்விட்டரில் குறிப்பிட்ட நட்சத்திரங்களை ரசிகர்கள் பெரிய அளவில் பின்தொடர்ந்து வருகிறார்கள். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்தவர் சூப்பர்ஸ்டார் ரஜினி. அவரது அக்கவுன்ட்டை கிட்டத்தட்ட 22 லட்சம் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

சமீபத்தில் நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் அக்கவுன்ட் 2 மில்லியன் எண்ணிக்கையிலான பின்தொடர்பாளர்களைப் பெற்றது. த்ரிஷாவைத் தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷின் ட்விட்டர் அக்கவுன்ட்டும் 2 மில்லியன் (20 லட்சம்) பின்தொடர்பாளர்களைப் பெற்று சாதனை படைத்திருக்கிறது. தமிழ்சினிமாவைப் பொறுத்தவரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை 87 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் ட்விட்டரில் பின்தொடர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;