வெற்றிமாறன் படத்திற்கு வெனிஸ் விருது!

வெற்றிமாறன் படத்திற்கு வெனிஸ் விருது!

செய்திகள் 14-Sep-2015 10:13 AM IST VRC கருத்துக்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ், சமுத்திரக்கனி முதலானோர் நடித்துள்ள படம் ‘விசாரணை’. தனுஷும், வெற்றிமாறனும் இணைந்து தயரித்துள்ள இப்படம் சமீபத்தில் நடந்த 72-ஆவது வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்த படத்திற்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்திருப்பதோடு ‘மனித உரிமைகளுக்கான திரைப்படம்’ (Cinema for Human Rights) என்ற விருதும் கிடைத்துள்ளது. இது வெனிஸ் திரைப்பட விழாவில் விருது பெறும் முதல் தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான் தனுஷும், வெற்றிமாறனும் இணைந்து தயாரித்த ‘காக்கா முட்டை’ படம் பல விருதுகளை வாங்கி குவித்தது. இந்த வரிசையில் வெற்றிமாறனின் ‘விசாரணை’ படமும் இடம் பெறும் என்று தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடிவீரன் - டீசர்


;