செப்டம்பர் 25-ல் பாய்கிறது ‘ஈட்டி’ இசை!

செப்டம்பர் 25-ல் பாய்கிறது ‘ஈட்டி’ இசை!

செய்திகள் 12-Sep-2015 3:10 PM IST VRC கருத்துக்கள்

‘சண்டி வீரன்’ படத்தை தொடர்ந்து அதர்வா நடிப்பில் அடுத்து ரிலீசாகவிருக்கும் படம் ‘ஈட்டி’. வெற்றிமாறனும், மைக்கேல் ராயப்பனும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ரவிஅரசு இயக்கி வருகிறார். இப்படத்தில் அதர்வா தடகள விளையாட்டு வீராராக நடித்திருக்கிறார். விளையாட்டு துறையில் நம் நாடு ஏன் பின் தங்கியிருக்கிறது என்ற கருத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார்.

நீண்ட நாட்களாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துவிட்டு போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். இவரது இசையில் அமைந்துள்ள பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இம்மாதம் 25-ஆம் நடைபெறவிருக்கிறது. இதனை தொடர்ந்து ‘ஈட்டி’ படத்தை விரைவில் வெளியிடவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

என் ஆளோட செருப்ப காணோம் - டீசர்


;